மின்மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு பள்ளி-விடுதிகளில் சமைப்பதில் சிக்கல்
வடகாடு கிராமத்தில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, மாணவிகள் விடுதிகளில் சமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால், அப்பகுதி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் மின்மோட்டார் பழுது நீக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வடகாடு கிராமம் முழுவதும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புள்ளாச்சிகுடியிருப்பு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் காவிரி குடிநீர் கலங்களாக வருவதால் அங்கு சமையல் செய்வதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் வேறு பள்ளியில் சமையல் செய்து கொண்டு வந்து புள்ளாச்சிகுடியிருப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்துள்ளதால் கலங்கிய நிலையில் உள்ள காவிரி குடிநீரே வழங்கப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருகின்றனர்.
இதேபோல அருகில் உள்ள மாணவிகள் விடுதியிலும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களும் காவிரி குடிநீர் கலங்கிய நிலையில் வருவதால் நோய்கள் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.
ஆகவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடகாடு மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பல மாதங்களாக பழுதாகி உள்ள புள்ளாச்சி குடியிருப்பு நீர்த்தேக்க தொட்டிக்கான மின்மோட்டாரை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story