ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் பலி
ராயக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே பூவத்தி பக்கமுள்ளது மூங்கில்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சுகுணாத் (வயது 26). திருமணம் ஆகவில்லை. இவர் மோட்டார்சைக்கிளில் மூங்கில்பட்டியில் இருந்து ராயக்கோட்டை நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் சூளகிரி அருகே ஏனுசோனை பக்கமுள்ள கொத்தகுறுக்கியைச் சேர்ந்த கெஞ்சப்பா என்பவரின் மகன் தேவராஜ் (25), திம்மேகவுடு மகன் லோகேஷ் (27), தொட்டப்பா என்பவரின் மகன் ரவி (23) ஆகிய 3 பேரும் மற்றொரு மோட்டார்சைக்கிளில் ராயக்கோட்டையில் இருந்து சூளகுண்டாவிற்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ராயக்கோட்டை அருகே உள்ள காலன்கொட்டாய் அருகில் சென்ற போது 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிள்களில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுகுணாத், தேவராஜ், லோகேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரவி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியான சுகுணாத் மற்றும் தேவராஜின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதே போல லோகேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story