மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா தனித்து போட்டி
மராட்டிய சட்டமன்ற மேல்-சபை தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா தனித்து போட்டியிடுகின்றன. இருகட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்ததால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய சட்ட மேல்-சபை தொகுதிகளான மும்பை பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர்கள் தொகுதி, கொங்கன் பட்டதாரிகள் தொகுதி, நாசிக் ஆசிரியர்கள் தொகுதி ஆகிய 4 தொகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம்(ஜூலை) 7-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தொகுதிகளுக்கு வருகிற 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதில் பட்டதாரிகள் தொகுதிக்கு அந்த தொகுதியில் வசிக்கும் பட்டம் பெற்றவர்களும், ஆசிரியர்கள் தொகுதிக்கு அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் வாக்களித்து வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
இந்தநிலையில் கொங்கன் பட்டதாரிகள் மற்றும் மும்பை ஆசிரியர்கள் ஆகிய 2 மேல்-சபை தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. கொங்கன் பட்டதாரிகள் தொகுதியில் சிவசேனா சார்பில் சஞ்சய் மோரேயும், பா.ஜனதா சார்பில் தவ்காரே என்பவரும் போட்டியிடுகின்றனர். இதில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நஜீப்முல்லாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.
இதேபோல மும்பை பட்டதாரிகள் தொகுதியில் பா.ஜனதாவின் அமித் மேதாவும், சிவசேனாவின் விலாஸ் போட்னிசும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரிக்கின்றன. மும்பை பட்டதாரிகள் தொகுதி உறுப்பினரான மாநில சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த்துக்கு இந்த தேர்தலில் சிவசேனா வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் சிவசேனா மோதிக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் மேல்-சபை தேர்தலில் எதிரெதிராக போட்டியிடுவதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story