குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jun 2018 4:15 AM IST (Updated: 19 Jun 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட நிர்வாகம், அரசு துறைகள் மற்றும் மாவட்டத்தின் விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய குமரி மாவட்ட வலைதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிராசந்த் வடநேரே கலந்துகொண்டு, புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), ராகுல்நாத், தேசிய தகவலியல் தொழில்நுட்ப இயக்குனர்கள் விக்டர் ஞானதாஸ் (குமரி), ஞானபிரகாசம் மற்றும் மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

குமரி மாவட்ட நிர்வாகம், அரசு துறைகள் மற்றும் மாவட்டம் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய மாவட்ட தேசிய தகவல் மைய அலுவலர்களால் வடிவமைக்கப்பட்ட https://kanniyakumari.nic.in என்ற மாவட்ட வலைதளத்தின் சேவைகளை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

Next Story