குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை மனு


குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 19 Jun 2018 3:30 AM IST (Updated: 19 Jun 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலம் பூசங்குடி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வடபாதிமங்கலம் பூசங்குடியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு சிறிய அளவில் குடிநீர் தொட்டி ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. வீட்டிற்கு 2 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது. மாலை நேரத்தில் குடிநீர் வருவதில்லை. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதுகுறித்து பல முறை ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எங்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் செய்து விடுவதாக மிரட்டுகிறார். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி உதவியாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை மாற்றம் செய்ய வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் சிறிய அளவில் நீர்தேக்க தொட்டியை உடனே அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story