பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 19 Jun 2018 4:50 AM IST (Updated: 19 Jun 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 184 மனுக்களை வழங்கினார்கள்.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதன்படி கைகளை இழந்த மாற்றுத்திறன் கொண்ட அத்திப்பாடியை சேர்ந்த மோனிகா, கக்கதாசம் கிராமத்தை சேர்ந்த ராமப்பா, செட்டிமாரம்பட்டியை சேர்ந்த ஆனந்தன், கோவிந்தாபுரத்தை சேர்ந்த சத்தியராஜ், அலசநத்தம் பகுதியை சேர்ந்த கோபால்ரெட்டி ஆகியோருக்கு தலா ரூ.80 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள செயற்கை கை மற்றும் கால் இல்லாத மாற்றுத்திறன் கொண்ட பெருகோபனப்பள்ளியை சேர்ந்த முருகன் என்பவருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நவீன செயற்கை கால் என மொத்தம் 6 பேருக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story