நாசிக்கில் பரிதாபம்: கார்-ஆட்டோ நேருக்குநேர் மோதல் - 4 பேர் பலி
நாசிக்கில் கார்-ஆட்டோ நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாசிக்,
நாசிக் மாவட்டம் சினார்-கோட்டி சாலையில் பயணிகளுடன் உம்பர்காவ் கிராமம் நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் அதே சாலையில் எதிரே கார் ஒன்று வேகமாக வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக காரும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த அவினாஷ் தல்பாகத் (வயது22), பாஸ்கர் கோர்டே(65), ஷிவராம் சருக்தே(42) மற்றும் அர்ஜூன் சருக்தே(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். காயமடைந்த கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பலியானோர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டி பகுதி போலீசார் தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story