திருடர்களை கண்டறிய உதவும் நுண்ணுயிர் கையெழுத்து!
நம்மூரில், ஒன்றுமே புரியாத ஒரு புதிராக இருக்கக்கூடிய ஒரு நிகழ்வை/விஷயத்தை சுட்டிக்காட்ட, ‘மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தான்’ என்பது போல இருக்கிறது என்று சிலர் சொல்வது வழக்கம்.
மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தான் என்று யாராவது சொன்னால், அதனைக் கேட்பவருக்கு, ‘எந்த மொட்டைத் தலையன், எந்த குட்டையில், ஏன், எப்படி, எப்போது விழுந்தான்?’ என பல கேள்விகள் எழுவது இயல்பு.
அதுபோலவே, ஏதாவது ஒரு இடத்தில் திருடு போவது அல்லது ஒருவர் கொலை செய்யப்படுவது போன்ற ஒரு குற்றம் நிகழ்ந்தால், அந்த கொலை ஏன், எப்படி, எப்போது நடந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறிந்தால்தான் குற்றவாளியைக் கண்டறிய முடியும். தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பலனாக ஒவ்வொரு நாளும் அதிநவீன கருவிகள் சந்தைக்கு வரும் இந்த காலத்திலும் சில குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை அவர்களின் டி.என்.ஏ போன்ற உயிரியல் மூலக்கூறு தடயங்களைக் கொண்டு கூட பல சமயங்களில் திட்டவட்டமாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை! ஏனெனில், அத்தகைய நவீன தடயவியல் வழிமுறைகளிலும் சில குறைபாடுகள் அல்லது ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதன் காரணமாக, குற்றவாளிகளை துல்லியமாக மற்றும் உறுதியாக அடையாளம் காட்டும் தடயவியல் கருவிகள் அல்லது வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.
அத்தகைய ஆய்வு ஒன்றின் பலனாக, ஒரு குற்றம் நடந்த இடத்தில், அந்த குற்றத்தைச் செய்த மனிதனின் தோல் மற்றும் நாசித் துவாரம் போன்ற பகுதிகளில் இருந்து உதிர்ந்து கீழே விழும் பாக்டீரியா மற்றும் இதர நுண்ணுயிரிகளைக் கண்டறிவதன் வாயிலாக குறிப்பிட்ட அந்த மனிதன்தான் குற்றவாளி என்பதை உறுதியாகக் கூற முடியும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஷிக்காகோ நகரில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்!
‘நுண்ணுயிர் கையெழுத்து (microbial signature)’ என்று அழைக்கப்படும், ஒவ்வொரு மனிதனுடைய ‘பிரத்தியேக நுண்ணுயிர் கலவையை’ அடையாளம் காண்பதன் மூலமாக குற்றவாளிகளை கண்டறிய உதவும் இந்த புதிய தொழில்நுட்பம் பிங்கர் பிரிண்டிங் மற்றும் டி.என்.ஏ. தடயங்களுடன் இணையும்பொழுது தடவியலுக்கான ஒரு வலிமையான கருவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் சுவாரசியமாக, மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரத்தில் சுமார் 3.6 கோடி நுண்ணுயிரிகளை சுற்றுச்சூழலுக்குள் வெளியிடுகிறார்கள் என்கின்றன நுண்ணுயிரியல் ஆய்வுகள். இதன் காரணமாக, ஒவ்வொரு வீட்டுக்கும் பிரத்தியேகமான ஒரு நுண்ணுயிர் அமைப்பு (home microbiome) இருக்கிறது என்று சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பினால் ஈர்க்கப்பட்டு, மனிதர்களின் செல்போன் மற்றும் காலணிகள் மீது நுண்ணுயிர் ஆய்வுகளை மேற்கொண்டு, மனிதர்களின் பிரத்தியேக நுண்ணுயிர் கலவை அவர்களின் உடைமைகளுக்கும் கடத்தப்படுகிறது என்பதை முதலில் உறுதி செய்தனர் ஆய்வாளர் ஜாரட் ஹேம்ப்டன் மார்செல் உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் தடயவியல் நிபுணர் ஒருவரின் உதவியுடன், ஒரு குற்றம் நடந்த இடம் எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில் பொய்யான குற்றவாளிகளின் உதவியுடன் பொய்யான குற்றங்கள் சில வீடுகளில் நிகழ்த்தப்பட்டு அந்த வீடுகள் தடயவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில், தனிநபர் உதிர்க்கக் கூடிய நுண்ணுயிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அது பொய்யான குற்ற ஆய்வில் பங்குபெற்ற குறிப்பிட்ட ஒரு நபரின் உடலில் இருந்து வெளியானது என்றும், அதுபோலவே பலரின் நுண்ணுயிர் கலவையும் சேகரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டது. இதன் அடிப் படையில், சிக்காகோ நகரில் உள்ள மேலும் பல வீடுகளில் பொய்யான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு அவற்றை செய்த பொய் குற்றவாளிகளை அவர்களின் நுண்ணுயிர் கலவை மூலமாக அடையாளம் காண முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டது.
ஆக மொத்தத்தில், ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா அல்லது நுண்ணுயிரியை வைத்து அவன் செய்யக்கூடிய குற்றங்களை உறுதிசெய்து, அவனை சுமார் 70% துல்லியத்துடன் அடையாளம் காட்ட முடியும் என்று இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, தடயவியலில் தற்போது டி.என்.ஏ என்பதே மிகச்சிறந்த ஒரு தடயமாக இருக்கிறது. இருந்தாலும், குற்றம் நடந்த இடங்களில் குற்றவாளியின் டி.என்.ஏ அல்லது கைரேகை போன்ற முக்கியமான தடயங்கள் இல்லாத பட்சத்தில் அல்லது அழிக்கப்பட்டுவிட்ட சூழலில், குற்றவாளிகளின் நுண்ணுயிர் கலவை அல்லது கையெழுத்தை வைத்து, இன்னார்தான் குற்றவாளி என்பதை 70% துல்லியத்துடன் மிக உறுதியாக அடையாளம் காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளது இந்த புதிய ஆய்வு. ஆனால், ஒரு மனிதனுடைய நுண்ணுயிர் கலவை என்பது ஒரு நம்பகமான தடயவியல் கருவியாக மாறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
- தொகுப்பு: ஹரிநாராயணன்

Related Tags :
Next Story