குண்டும், குழியுமான தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திருமானூர் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூரிலிருந்து திருவெங்கனூர் வழியாக செல்லும் எழுநாட்சிபுரம், காட்டூர் சாலை மற்றும் திருமானூரிலிருந்து கால்நடை மருந்தகம் வழியாக செல்லும் அருங்கால் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலைகள் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான சாலையாகும். இந்த இரண்டு சாலைகளின் வழியாக திருமானூர் கிழக்கு பகுதிகளிலிருந்து வரும் சுள்ளங்குடி, விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி போன்ற ஊர்களிலிருந்து வரும் பொதுமக்கள் எளிதாக திருமா னூரில் உள்ள அலுவலகங் களுக்கும், அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சாலை களாகும். இந்த இரண்டு சாலைகளும் பல வருடங் களாக மிகவும் மோசமான நிலையில் வாகனங்களும், பொதுமக்களும், பயணிக்கும் அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த அளவிற்கு இந்த இரண்டு தார்ச்சாலைகளும் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. மேலும், இந்த தார்ச்சாலைகள் மண் சாலையை விட மோசமான நிலையில் உள்ளன. மேலும், மழைக்காலங்களில் இந்த சாலையில் பயணம் செய்ய முடியாத நிலையில் மோசமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர்கள் கீழே விழுந்து விடுமோ என்று அச்சத்தில் இந்த தார்ச்சாலையில் பயணித்து வருகின்றனர். மேலும் சாலைகளின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து முட்புதர்களாக காட்சியளிக்கின்றன.
இந்த சாலைகளை சீரமைத்து தரக்கோரி இப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. எனவே கிராம புற பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த தார்ச்சாலையை மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story