கியாஸ் கம்பெனியில் இருந்து மத்தம்பாளையம் வரை இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றம்


கியாஸ் கம்பெனியில் இருந்து மத்தம்பாளையம் வரை இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றம்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:15 AM IST (Updated: 20 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் சாலையில் கியாஸ் கம்பெனியில் இருந்து மத்தம்பாளையம் வரை உள்ள இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

பெ.நா.பாளையம்.

கோவை–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கியாஸ் கம்பெனியில் இருந்து மத்தம்பாளையம் வரை உள்ள இரு வழிப்பாதையை விரிவாக்கம் செய்து மேற்படி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்று அதற்காக ரூ.40.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்கான பூமிபூஜை நேற்று பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நெ.4 வீரபாண்டி பிரிவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். பூஜையை தொடர்ந்து சாலை விரிவாக்கத்திற்கான முதற்கட்ட பணியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை, எளிமையான முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் தொய்வின்றி தொடர்கிறார். காவிரிமேலாண்மை வாரியம் அமைத்திட அரும்பாடுபட்டு அதில் வெற்றி கண்டார். அதேபோல் மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை மூடியதிலும் வெற்றி கண்டுள்ளார். கோவை–மேட்டுப்பாளையம் சாலையை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு முதற்கன நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவை மாவட்டத்தில் 8 சாலைகளை விரிவாக்கம் செய்யவும் 6 மேம்பாலங்களை கட்டவும் மத்திய அரசுடன் கலந்து பேசி அதற்கான ஒப்புதல் பெறும் நிலையை முதல்–அமைச்சர் எட்டி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story