திருச்சி மாநகரை 3 ஆயிரம் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வசதி விரைவில் அறிமுகம்
ரூ.1 கோடி செலவில் 3 ஆயிரம் கேமராக்கள் மூலம் திருச்சி மாநகரை கண்காணிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது. திருச்சி மாநகரில் சட்டம்-ஒழுங்கினை பேணி காக்கவும், குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்தை சீர்செய்து கண்காணிக்கவும், மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக திருச்சி மாநகரம் முழுவதையும் இணைக்க திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை ரூ.1 கோடி செலவில் நவீனமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரே இடத்தில் அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்் உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியின் கீழ், சி.சி.டி.வி. கேமரா இணைப்புப் பணி மற்றும் எல்.இ.டி. டிஸ்பிளே பொருத்தும் பணிக்காக, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் மேம்பாட்டு நிதி மூலமாக ரூ.84 லட்சத்து 30 ஆயிரம் வழங்கி உள்ளார்.
மேலும் தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முதல் கட்டமாக தனியார் விளம்பர மற்றும் அரசு நிறுவனங்கள் மூலமாக திருச்சி மாநகரில் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கண்காணிப்பு கேமராக்களை தொடர் இணைப்பின் மூலமாக இணைத்து, காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து, பிரச்சினை நடக்கும் இடம் குறித்த தகவல் வந்தால்கூட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பள்ளி, கல்லூரிகள், திருச்சி மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள், திருச்சி விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 3 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகளை காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக கட்டுப்பாட்டு அறையில் டிஜிட்டல் டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவன உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி தங்கள் வீடு மற்றும் நிறுவனத்தை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தால் கட்டுப்பாட்டறையின் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் இதன்மூலம் பயன்பெறும் வகையில், இரவு நேர பதிவுகளும் தெளிவாக தெரியும் வகையில் 4 மெகாபிக்ஸல் கேமராக்கள் மற்றும் அதன் சார்புடைய சாதனங்களையும் திருச்சி மாநகரில் உள்ள சாலைகளை நோக்கியும் மற்றும் அனைத்து பகுதிகளிலும் அமைத்து ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை, எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் ஏற்பாட்டினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், திருச்சி மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், குமார் எம்.பி. ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன், திருச்சி விமான நிலைய இயக்குனர் மு.குணசேகரன், உதவி கலெக்டர் கமல் கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story