இனி விமர்சனங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் மந்திரி ஜெயமாலா பேட்டி
இனி விமர்சனங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று மந்திரி ஜெயமாலா கூறினார்.
பெங்களூரு,
இனி விமர்சனங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று மந்திரி ஜெயமாலா கூறினார்.
சேவை என்ற சொல்லை...கர்நாடக மேல்–சபை உறுப்பினராக உள்ள ஜெயமாலாவுக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. மந்திரி பதவி கிடைக்காததால், காங்கிரசை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஜெயமாலா கட்சியில் ‘சேவை‘ ஆற்றியதால் அவருக்கு மந்திரி பதவி கிடைத்து இருக்கும் என்று லட்சுமி ஹெப்பால்கர் கூறினார்.
சேவை என்ற சொல்லை வேறு அர்த்தத்துடன் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாக கருதி மந்திரி ஜெயமாலா கடும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலளித்த லட்சுமி ஹெப்பால்கர், தான் தவறான அர்த்தத்தில் சேவை என்ற சொல்லை குறிப்பிடவில்லை என்று கூறினார். இந்த நிலையில் இதுகுறித்து கன்னட கலாசாரம் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை மந்திரி ஜெயமாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
மிகுந்த மரியாதை உள்ளது‘‘வயதில் நான் லட்சுமி ஹெப்பால்கரை விட மூத்தவள். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியாக அவர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அன்பும் இருக்கிறது. மந்திரி பதவியை கேட்பது அவருடைய உரிமை.
காங்கிரசில் வெற்றி பெற்ற அனைத்து பெண்களுக்கும் மந்திரி பதவி கிடைக்கட்டும். பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும். லட்சுமி ஹெப்பால்கர், ரூபா சசிதர் ஆகியோருக்கும் மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இனிமேல் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். எனது பணியில் கவனம் செலுத்துவேன்.’’
இவ்வாறு ஜெயமாலா கூறினார்.