குடிநீர் வழங்கக்கோரி சோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை


குடிநீர் வழங்கக்கோரி சோமங்கலம்  ஊராட்சி  மன்ற  அலுவலகம்  முற்றுகை
x
தினத்தந்தி 20 Jun 2018 3:12 AM IST (Updated: 20 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி சோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் உள்ள சோமங்கலம், மேட்டூர், இந்திராநகர், போன்ற பகுதிகளில் 1000–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஒரு சிலர் முறைகேடாக தொட்டி அமைத்து அதில் தண்ணீரை அதிக அளவில் சேமித்து வைத்து கொள்வதால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்  சோமங்கலம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

முற்றுகை

மறியலில் ஈடுபட்ட அவர்கள் திடீரென சோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையாக குடிநீர் வழங்கவும். பழுதான மின்மோட்டார்களை சரிசெய்ய வேண்டும் என்றும் தெருவிளக்குகளை சீரமைத்து தரவேண்டும் என கூறி கோ‌ஷமிட்டனர். இது குறித்து  தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறைகளை கேட்டறிந்தனர்.

 பின்னர் பொதுமக்களிடம் முறையாக குடிநீர் வழங்கப்படும், தெருவிளக்குகள் எரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story