2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் உத்தவ் தாக்கரே தாக்கு


2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் உத்தவ் தாக்கரே தாக்கு
x
தினத்தந்தி 20 Jun 2018 4:30 AM IST (Updated: 20 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார்.

மும்பை, 

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார்.

கட்சியின் 52-வது ஆண்டு விழா

மத்தியிலும், மாநில அரசிலும் பா.ஜனதா தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மும்பை கோரேகாவில் சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பொய் மூட்டைகள்

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது, பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களை ஆட்சியில் அமரவைத்து ஏமாற்றம் அடைந்து விட்டனர்.

இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் பங்களாவிற்கு அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டு ஒன்றை கண்டதாக சில நிருபர்கள் செய்தி வெளியிட்டனர். அனேகமாக பிரதமர் மோடி தற்போது வேற்று கிரகங்களுக்கு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

போர் நிறுத்தம் ஏன்?

ஜம்மு- காஷ்மீரில் கூட்டணி ஆட்சியில் இருந்து சிவசேனா வெளியேறி உள்ளது. அந்த ஆட்சி பயனற்றது என கண்டறிய பா.ஜனதாவுக்கு 3 ஆண்டுகளும், 600 ராணுவ வீரர்களின் உயிரும் தேவைப்பட்டதா?

பயங்கரவாதத்துக்கு மதத்துடன் சம்பந்தம் இல்லை என்றால், ரம்ஜானை யொட்டி காஷ்மீரில் நீங்கள் ஏன் போர் நிறுத்தம் அறிவித்தீர்கள்?. விநாயகர் சதுர்த்தி அல்லது தசரா விழாக்களின் போது, பாகிஸ்தான் இதேபோன்ற கொள்கையை பின்பற்றுகிறதா?

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

Next Story