மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு விரைவில் அறிமுகம்


மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு விரைவில் அறிமுகம்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:45 AM IST (Updated: 20 Jun 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

மும்பை, 

மும்பை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

பயோ மெட்ரிக் வருகை பதிவு

மும்பை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் கவுன்சிலர்களுக்கு சாதாரண வருகை பதிவேடு முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனால் பல கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.

கவுன்சிலர்களுக்கும்...

மும்பை மாநகராட்சியில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்து உள்ளனர். இதனைத்தொடர்ந்து பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பயோ மெட்ரிக் வருகை பதிவில் கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்திற்குள் நுழையும் போதும், வெளியே வரும் போதும் கை ரேகையை பதிவு செய்யவேண்டும்.

இதன் மூலம் கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்பது தெரியவரும்.

Next Story