மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:48 AM IST (Updated: 20 Jun 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர்,

ஆம்பூர் தாலுகா ஆலாங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி, 8 வயது நிரம்பிய பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அழுதபடி தனது பெற்றோரிடம் கூறினாள். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மாணவியை கடத்தி சென்றதற்காக 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் மாணவியை, பாலியல் பலாத்கார நோக்கத்தோடு மாணவியை அழைத்து சென்றதற்காக 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் சதீஷ்குமாருக்கு விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி வேலூர் மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார்.

இதையடுத்து பலத்த காவலுடன் சதீஷ்குமார் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Next Story