‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை ரூ.45 கோடியில் அழகுபடுத்தப்பட உள்ளது
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை ரூ.45 கோடியில் அழகுபடுத்தப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
வேலூர் மாநகரம், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் புதிதாக பூங்காக்கள் அமைப்பது, ஈரடுக்கு பஸ் நிலையம் அமைப்பது, சாலையை சீரமைப்பது, கோட்டையை அழகுபடுத்துவது, அதிநவீன வாகன நிறுத்தும் இடம் அமைப்பது உள்பட பல்வேறு பணிகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட இயக்குனர் பழனிசாமி, கலெக்டர் ராமன் ஆகியோர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அழகுபடுத்தப்பட உள்ள வேலூர் கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோட்டைக்கு வரும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் அமைப்பது குறித்தும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகுபடுத்துவது குறித்தும், சேதமடைந்து காணப்படும் பகுதியை சீரமைப்பது குறித்தும் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து அவர்கள், சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டனர். அங்கு ரூ.13 கோடி செலவில் நவீனரக எந்திரங்கள் மூலம் குப்பைகளை அகற்ற மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது மற்றும் அதனை அகற்றுவது குறித்து கேட்டறிந்தனர்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் சுரேஷ்குமார், மாநகர நல அலுவலர் மணிவண்ணன், 2-வது மண்டல சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக காணப்படும் வேலூர் கோட்டை ரூ.45 கோடியில் அழகுபடுத்தப்பட உள்ளது. இரவில் கோட்டையின் அழகை பிரதிபலிக்கும் வகையில் வண்ண மின் அலங்காரங்கள் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் செய்யப்பட உள்ளன என்றனர்.

Related Tags :
Next Story