ஊனைமாஞ்சேரியில் விவசாயி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
ஊனைமாஞ்சேரியில் விவசாயி வீட்டில் 40 பவுன் நகை திருடப்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊனைமாஞ்சேரி கிராமத்தில் உள்ள பெரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 44), விவசாயி, இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு முன் பக்க வாசல் பகுதியில் உள்ள வராண்டாவில் குடும்பத்தினருடன்தூங்கிக்கொண்டு இருந்தார்.
நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்த போது பின் பக்க கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை திருட்டு
வீட்டுக்குள் சென்று பார்த்த போது சாவி மூலம் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story