பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
சிங்கபெருமாள் கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் பஜார் வீதியில் ஸ்ரீபெரும்புதூர் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதை உடனடியாக தொடங்கி பணி முடிக்க வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனிவாச அய்யங்கார், மாவட்ட துணை தலைவரும் முன்னாள் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தலைவருமான இளந்தோப்பு வாசு, மாவட்ட துணை செயலாளர்கள் தேவராஜ், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாநில துணை தலைவர்கள் கருணாநிதி, வெங்கடாஜலபதி, செந்தில்குமார் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் பி.வி.கே. வாசு, பழக்கடை கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story