பேரூராட்சி ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கு: திண்டுக்கல் கோர்ட்டில் சாட்சியம் அளித்த கலெக்டர்
பேரூராட்சி ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகி கலெக்டர் டி.ஜி.வினய் சாட்சியம் அளித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலுச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது வீட்டுமனைக்கு அங்கீகாரம் பெற வேலுச்சாமியை அணுகினார். அப்போது, ரூ.9 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று வேலுச்சாமி கூறினார்.
இதுகுறித்து, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் காளிமுத்து புகார் அளித்தார். இதையடுத்து, அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் கூறியபடி காளிமுத்து அந்த ரூபாய் நோட்டுகளை வேலுச்சாமியிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலுச்சாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதி பெற்றனர். இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்பட 14 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வழக்கின் முதல் சாட்சியான கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.
பின்னர், நீதிபதி நம்பி முன்பு சுமார் 15 நிமிடங்கள் அவர் சாட்சியம் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story