கருங்கல் அருகே வினோதம்: தான் படிக்காததால் மகனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்த தொழிலாளி
தான் படிக்காததால் மகனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப தொழிலாளி மறுத்தார். கண்டித்த மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
கருங்கல்,
கருங்கல் அருகே தொலையாவட்டம் கண்ணன்விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிரபா (வயது 32). இவர்களுடைய மகன் சுபின் (7). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
மகன் சுபின் பள்ளிக்கு செல்வது சுரேஷ்குமாருக்கு பிடிக்கவில்லை. சுரேஷ்குமார் பள்ளிக்கு சென்று படிக்காததால், தன்னுடைய மகனும் படிக்கக்கூடாது என்று நினைத்துள்ளார்.
வசதி வாய்ப்பு இல்லாததால் நான் தான் பள்ளிக்கூடம் செல்லவில்லை, என்னுடைய மகனாவது பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையின் எண்ணமாக இருக்கும். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் சுரேஷ்குமாரின் செயல்பாடு இருந்தது. மேலும் மகனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக்கூடாது என்று கூறி மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சுபின் பள்ளிக்கு செல்ல தயாரானார். அப்போது, சுரேஷ்குமார் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று சுபினை தடுத்தார். இதனை பிரபா கண்டித்ததால் மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், பிரபாவை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சுரேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தான் படிக்காததால் மகனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்த தொழிலாளி, மனைவியை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Related Tags :
Next Story