ரூ.45 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு


ரூ.45 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு
x
தினத்தந்தி 21 Jun 2018 4:15 AM IST (Updated: 21 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர், சட்ராஸ், கேளம்பாக்கம், தாழம்பூர், மாமல்லபுரம், கூவத்தூர், மானாமதி உள்ளிட்ட துணை கோட்டங்களில் உள்ள பகுதிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை மகளிர் போலீஸ் நிலையம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 

இதையடுத்து தமிழக அரசு மாமல்லபுரத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ரூ.45 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்தது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமை தாங்கினார். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். 

சிறப்பு அழைப்பாளராக மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் கலந்து கொண்டு புதிய மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாமல்லபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஏ.கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், பெ.பூங்குழலி, எம்.சேகர், சப்–இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story