சென்டிரலில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு
சென்னை சென்டிரலில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
சென்னை,
சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று நள்ளிரவு 13 வயது சிறுவன் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிவதை, அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகன் பார்த்தார். அந்த சிறுவனை அழைத்து விசாரித்தார். அப்போது சிறுவன் மீஞ்சூரை சேர்ந்தவன் என்பதும், பெற்றோர் திட்டியதால் கோபத்தில் ரெயில் ஏறி சென்டிரல் வந்ததும், பின்னர் என்ன செய்வது? என்பது தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது.
சிறுவன் கூறிய விவரங்களின் அடிப்படையில் அவனது பெற்றோரை போலீசார் தொடர்புகொண்டனர். அதனைத்தொடர்ந்து அதிகாலை வந்த பெற்றோரிடம், அச்சிறுவனை சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் பத்திரமாக ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story