தொழில் தொடங்குவதற்கு உரிமங்களை எளிதாக பெறலாம் கலெக்டர் ஷில்பா தகவல்


தொழில் தொடங்குவதற்கு உரிமங்களை எளிதாக பெறலாம்  கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2018 2:30 AM IST (Updated: 21 Jun 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

தொழில் தொடங்குவதற்கு இணையதளம் வழியாக எளிதாக உரிமம் பெறலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

தொழில் தொடங்குவதற்கு இணையதளம் வழியாக எளிதாக உரிமம் பெறலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

பயிற்சி கூட்டம்

நெல்லை மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு வணிக எளிதாக்கும் விதிகளின்படி, இணையதள வசதியை பயன்படுத்துவது தொடர்பாக அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

எளிதாக பெறலாம்

தமிழ்நாடு வணிக எளிதாக்கும் விதிகள் 2017 மற்றும் 2018 சட்டத்தின்படி, தொடர்புடைய துறைகள், வாரியங்கள், கழகங்களிடமிருந்து தொழில் முனைவோருக்கு உரிமங்கள் பெறுவதற்கு எளிதாக ஒரு முனையில் (single window) கிடைப்பதற்காக, முதல்–அமைச்சரால் www.easybusiness.tn.gov.in/msme என்ற இணையதளம் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம் தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு உரிமம் மற்றும் அனுமதிகளை ஒரு முனையில் இணையதளம் மூலம் எளிதாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் மூலமாக...

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு, தொழில் தொடங்குவதில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில், ஒரு முனை தீர்வு இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதிதாக தொழில் தொடங்குவர்கள் உரிமம் மற்றும் அனுமதியை விரைந்து பெற முடியும்.

நெல்லை மாவட்டத்தில் தொழில் தொடங்குபவர்கள் இதனை பயன்படுத்தி அதிகமான தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு சமந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் முருகேஷ், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் செந்தில்குமார் (நெல்லை), சோமசுந்தரம் (சங்கரன்கோவில்), உதவி பொறியாளர் ராமச்சந்திரன், சென்னை முத்து சாண்ப்ட் லேப் தொழில்நுட்ப வல்லுனர் கிறிஸ்டோபர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story