பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாட்டு வண்டியில் அமர்ந்து கோஷம் எழுப்பியதுடன் சிலிண்டருக்கு மாலையும் அணிவித்தனர்.
தஞ்சாவூர்,
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், உடனே விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் திருஞானம், பக்கிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சின்னதம்பி, முருகையன், ராமசாமி, ராமச்சந்திரன், கணேசன், மார்க்ஸ், பாரதிமோகன், மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் மாட்டு வண்டியில் பெண்கள், ஆண்கள் சிலர் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி கோஷங்கள் எழுப்பியதுடன் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முடிவில் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story