ஊராட்சி எழுத்தர் மீதான நடவடிக்கைக்கு கண்டனம்: வட்டார வளர்ச்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
ஊராட்சி எழுத்தர் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பூதலூரில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஒன்றிய அதிகாரிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் எழுத்தர் அந்த ஊராட்சியில் பணிகளை மேற்கொள்வதில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று வெண்டயம்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் பூதலூர் ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரகுநாதன், காந்தரூபன் ஆகியோரை முற்றுகையிட்டு, வெண்டயம்பட்டி ஊராட்சி எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, அவரை பணியிட மாற்றம் செய்ய கூடாது, வெண்டயம்பட்டியில் உள்ள சிமெண்டு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் சங்க தலைவர் இமானுவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணையன், தி.மு.க. நிர்வாகி ஜெயக்குமார், அ.தி.மு.க. நிர்வாகி ரெங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
போராட்டத்தின்போது தவறான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படிதான் செயல்பட்டு வருகிறோம் என்றும், கிராம மக்களின் கருத்துகளை கலெக்டரிடம் தெரிவிப்போம் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.

Related Tags :
Next Story