ரூ.2,900 கோடி கடன்மோசடி வழக்கில் மகாராஷ்டிரா வங்கி நிர்வாக இயக்குனர் கைது


ரூ.2,900 கோடி கடன்மோசடி வழக்கில் மகாராஷ்டிரா வங்கி நிர்வாக இயக்குனர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2018 3:57 AM IST (Updated: 21 Jun 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2,900 கோடி கடன் மோசடி தொடர்பாக மகாராஷ்டிரா வங்கி நிர்வாக இயக்குனர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

புனே, 

ரூ.2,900 கோடி கடன் மோசடி தொடர்பாக மகாராஷ்டிரா வங்கி நிர்வாக இயக்குனர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ரூ.2,900 கோடி

புனேயை தலைமையகமாக கொண்டு கடந்த 83 வருடங்களாக பொதுத்துறை வங்கி நிறுவனமான ‘பேங்க் ஆப் மகாராஷ்டிரா’ செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனமான டி.எஸ்.கே. குழுமத்துக்கு ரூ.2,900 கோடி வரையில் முறைகேடாக கடன் வழங்கியதாக குற்றம்சாட்டி ‘பேங்க் ஆப் மகாராஷ்டிரா’ நிர்வாக இயக்குனர் ரவீந்திர மரதே என்பவரை நேற்று மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ரவீந்திர மரதே தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டி.எஸ்.கே. குழுமத்தினர் கடன்பெறுவதற்கு உதவியதாக கூறப்படுகிறது.

மேலும் 3 பேர் கைது

மேலும், இது தொடர்பாக ‘பேங்க் ஆப் மகாராஷ்டிரா’ இயக்குனர் ராஜேந்திர குப்தா, மேலாளர் நித்யானந்த் தேஷ்பாண்டே மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுஷில் முனோட் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

டி.எஸ்.கே. குழுமத்தின் உரிமையாளர் குல்கர்னி மற்றும் அவரது மனைவி ஹேமாவதி ஆகியோர் முதலீட்டாளர்களிடம் ரூ.1,150 கோடி மோசடியில் ஈடுபட்டது மற்றும் வங்கி கடன் மோசடி தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story