இடமாறுதல் வழங்காததால் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து மாவட்டங்களுக்கும் இடமாறுதல் வழங்காததால் அதிருப்தி அடைந்த இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஊட்டி,
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளி கல்வித்துறை சார்பில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படு கிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு கடந்த 12-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களுக்காக நீலகிரியில் பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து இருந்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அப்பர்பஜாரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆசிரியர்க ளுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. கடைசிநாளான நேற்று இடைநிலை ஆசிரியர் களுக்கு கலந்தாய்வு நடந்தது. தமிழக அரசு அதிகமான காலியிடங்களை கொண்ட 8 மாவட்டங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டு இருந்தது.
ஊட்டியில் நடந்த கலந்தாய்வில் ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி களில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட 8 மாவட்டங் களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்துவதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கலந்தாய்வில் கலந்துகொள்ள வந்த ஆசிரியர்கள் 20-க்கும் மேற்பட்டோர், அவர்கள் விருப்பப்பட்டு கேட்டு மாவட்டங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கக்கோரி நகராட்சி தொடக்கப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தொடர்பாளர் பரமேஸ்வர், கூடலூர் வட்டார பொறுப்பாளர் பால் விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Related Tags :
Next Story