குற்றாலம் தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர் பெண் சாவு– காய்கறி வியாபாரிக்கு தீவிர சிகிச்சை
குற்றாலம் தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் பெண் உயிரிழந்தார். காய்கறி வியாபாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தென்காசி,
குற்றாலம் தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் பெண் உயிரிழந்தார். காய்கறி வியாபாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காய்கறி வியாபாரிநெல்லை மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுதாகர் (35). இவர் கேரள மாநிலத்துக்கு காய்கறிகளை விற்பனைக்காக அனுப்பி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
ஆலங்குளம் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். டிரைவர். இவருடைய மனைவி பொன் ஏஞ்சல் (வயது 45). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சுதாகருக்கும், பொன் ஏஞ்சலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதனை அறிந்த இரு குடும்பத்தினரும் சுதாகர், பொன் ஏஞ்சல் ஆகியோரைக் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் தங்களது கள்ளக்காதலை கைவிடவில்லை.
விஷம் குடிப்புஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதாகர், பொன் ஏஞ்சல் ஆகிய 2 பேரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறினர். பல்வேறு இடங்களில் சுற்றிய அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கினர்.
பின்னர் இரவில் சுதாகர், பொன் ஏஞ்சல் ஆகிய 2 பேரும் விடுதி அறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், இதுகுறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணைஉடனே போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடியவாறு கிடந்த சுதாகர், பொன் ஏஞ்சல் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன் ஏஞ்சல் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுதாகருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.