காவிரி நதிநீர் பிரச்சினையில் சட்டப்படி போராடி வெற்றி பெற்றுள்ளோம்
காவிரி நதிநீர் பிரச்சினையில் சட்டப்படி நீதி மன்றத்தை அணுகி போராடி வெற்றி பெற்றுள்ளோம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
சிவகங்கை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க. செயல்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் போன உடனே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் என்ன செய்வது. காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒப்பந்தத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் கடந்த 1974-ம் ஆண்டு புதுப்பிக்காமல் விட்டு விட்டார்.
அதன் விளைவாக நாம் இப்போது இவ்வளவு சிரமப்பட்டு நீதிமன்றத்தை அணுகி நமது உரிமையை மீட்டுள்ளோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணப்படி இந்த அரசு மக்களுக்கு பணியாற்றி வருகிறது. இன்று இந்தியாவிலேயே கல்வி, சுகாதாரம் ஆகியவைகளில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம், கற்பகம்இளங்கோ, சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் ராஜா, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டையன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மகளிரணி மாவட்ட செயலாளர் ஜாக்குலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் சிவகங்கையில்அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க. செயல்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் போன உடனே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் என்ன செய்வது. காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒப்பந்தத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் கடந்த 1974-ம் ஆண்டு புதுப்பிக்காமல் விட்டு விட்டார்.
அதன் விளைவாக நாம் இப்போது இவ்வளவு சிரமப்பட்டு நீதிமன்றத்தை அணுகி நமது உரிமையை மீட்டுள்ளோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணப்படி இந்த அரசு மக்களுக்கு பணியாற்றி வருகிறது. இன்று இந்தியாவிலேயே கல்வி, சுகாதாரம் ஆகியவைகளில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம், கற்பகம்இளங்கோ, சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் ராஜா, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டையன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மகளிரணி மாவட்ட செயலாளர் ஜாக்குலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story