பூந்தமல்லி நகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து 20 நாட்களில் உரம் தயாரிக்கும் திட்டம் சோதனை முறையில் தொடக்கம்
பூந்தமல்லி நகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து 20 நாட்களில் உரம் தயாரிக்கும் திட்டம் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் சித்ரா தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் சித்ரா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. தினமும் 7 டன் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு 7 இயற்கை உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து இயற்கை எரிவாயு உறபத்தி செய்யப்படுகிறது. இதனை மின் மயானத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் விற்க முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் 123 டன் அரியலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சோதனை முறையில்
தற்போது மக்கும் குப்பைகள் 40 நாட்களில் உரமாக்கப்படுகிறது. 20 நாட்களில் உரமாக்கும் பணி சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இதை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நகராட்சியில் குப்பைகள் அதிகம் தேங்கும் 14 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் குப்பைகள் தேங்காத வகையில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
7 இடங்களில் குப்பைகள் கொட்டுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே கொட்டி வைக்கப்பட்டுள்ள அனைத்து குப்பைகளும் 3 மாதத்தில் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு இந்த இடம் அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடந்த 8 மாதங்களாக புதன்கிழமை தோறும் சேகரிக்கப்பட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அதில் வந்த தொகையான ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் 102 துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story