இறும்பூதிபட்டியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு
இறும்பூதிபட்டியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குளித்தலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் இருந்து குளித்தலை- மணப்பாறை சாலை வழியாக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. குளித்தலை-மருங்காபுரி வரை உள்ள பகுதி மக்களுக்கு இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இக்குழாய்களில் அவ்வப்போது கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதும், பின்னர் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் அதை சரிசெய்வதும் வழக்கமாக நடக்கும். இந்த நிலையில் குளித்தலை அருகே உள்ள இறும்பூதிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் பல நாட்களாக இப்பகுதி வழியாக செல்லும் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறியுள்ளது.
இதை உடனடியாக சரிசெய்யாத காரணத்தால் நேற்று காலை 9 மணியளவில் குழாய் உடைந்து சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. அதிக வேகத்தில் தண்ணீர் வெளியேறியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சிலரது இரு சக்கர வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. குழாய் உடைந்ததால் வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள கடைகள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியில் உள்ள குளத்திற்குள் சென்றது.
இதுகுறித்து சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இக்குழாய் வழியாக தண்ணீர் கொண்டுசெல்வது நிறுத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற அலுவலர்கள், பணியாளர்கள் உடைந்த குழாயை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். மாலை வரை இப்பணி தொடர்ந்து நடைபெற்றது.
இக்குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பல நாட்களாக தண்ணீர் கசிந்து வந்ததை அறிந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று (நேற்று) லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. மேலும் அப்பகுதியில் கடை, வீடுகளில் தண்ணீர் புகுந்ததாலும், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்ததாலும் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். குடிநீர் குழாய் உடைந்து 10 அடிதூரம் தண்ணீர் வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story