சர்வதேச யோகா தின விழா


சர்வதேச யோகா தின விழா
x
தினத்தந்தி 21 Jun 2018 10:00 PM GMT (Updated: 21 Jun 2018 8:41 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் பகுதிகளில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் சேர்மன் குமரேசன், டாக்டர் சித்ரா குமரேசன், சி.இ.ஓ. அரவிந்த் தலைமையில் முதல்வர் முருகதாசன், துணை முதல்வர் சத்திய மூர்த்தி ஆலோசகர் பாரதி மற்றும் நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலையில் நடந்தது.

திருவில்லிபுத்தூர் தியாகராசா மேல்நிலைப்பள்ளியில், திருவில்லிபுத்தூர் அறிவுத் திருக்கோவில் இணைந்து விழா நடத்தப்பட்டது. இதில் அறிவுத்திருக்கோவில் தலைவர் சர்வஜித், பொருளாளர் முருகன், பொறுப்பாசிரியர் வேலாயுதராஜா, பேராசிரியர்கள் புலவர் வெள்ளை, ராமர், மற்றும் காலசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிச் செயலாளர் உமையொருபாகம் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் முருகன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமநாதன், தமிழாசிரியர் மாடசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிகுரு சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் செல்வராஜ் பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் தாளாளர் முருகேசன் தலைமையில் விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராணி முருகேசன் முன்னிலையில் மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியை செய்து காண்பித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளியில் பள்ளி முதல்வர் சுதாகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குணசேகரன், முருகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாத்தூர் மேட்டமலை சவுத்சைடு பள்ளிகளில் மாணவர்கள் சூரிய நமஸ்காரம், கண் பயிற்சி, மூச்சுப்பயிற்சி மற்றும் மனவளக்கலை மன்ற யோகா பயிற்சிகளை செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சவுத்சைடு பள்ளியின் மனவளக்கலை மன்ற ஆசிரியர் அருள்நிதி செய்திருந்தார். பள்ளி தாளாளர் பேராசிரியர் அருள்நிதி சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், மெட்ரிக் பள்ளி முதல்வர் அருள்நிதி லீலா மற்றும் இண்டர்நேசனல் பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலையிலும் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.

இதே போல சாத்தூர் எஸ்.எச்.என். எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் விழா நடந்தது. வெம்பக்கோட்டை எஸ்.பி. மாடர் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் பார்வதி சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் நிக்‌ஷன் செய்திருந்தார். முடிவில் புஷ்பா நன்றி கூறினார்.

விருதுநகர், சூலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் யோகாசன பயிற்சி செய்தனர்.

விருதுநகர் வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில், கல்லூரி முதல்வர் மீனா ராணி தலைமையில் விழா நடந்தது. விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில் தாளாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் யோகாசன பயிற்சி செய்தனர்.

விருதுநகர் அஸ்கான் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மழலையர் பள்ளியில் ஆசிரியை சிவசுந்தரி யோகாவின் முக்கியத்துவம் குறித்து கூறினார். விழாவில் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ராஜீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் மகாலிங்கம் உள்பட ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விருதுநகர் எஸ்.எப்.எஸ். பள்ளியில், பள்ளி முதல்வர் பிரான்சிஸ் தலைமையில் நடந்தது. விழாவில் மாணவ- மாணவிகள் யோகாசன பயிற்சிகளை செய்து காண்பித்தனர்.

Next Story