நீர்வரத்து 2,600 கனஅடியாக குறைந்தது: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,600 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பின. இதனையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியற்றில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ்களில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்று ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்ததால் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கபினி அணையில் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரின் அளவை அளந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று இரவு 7 மணி வரை கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story