திண்டுக்கல் மாவட்ட 2,500 மாணவர்கள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
திண்டுக்கல்,
மத்திய அரசின் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு யோகாசன சங்கம் ஆகியவை சார்பில், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இதில், 43 பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
சில மாணவர்கள், ஆணி பலகையில் அமர்ந்தபடி பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தலையில் கரகத்துடன் ஒருவர் யோகாசனம் செய்தார். முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்க தலைவர் சுந்தரராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சவுந்தரராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜதிலகம் மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. இதில், திண்டுக்கல் 14-ம் பட்டாலியன் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தை சேர்ந்த ஜி.டி.என். கலைக்கல்லூரி, செயின்ட் மேரிஸ் பள்ளி, ம.மூ.கோவிலூர் சி.எஸ்.எம்.ஏ. பள்ளி, எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு பள்ளிகளை சேர்ந்த 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் கர்னல் சஜி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஜி.டி.என். கலைக்கல்லூரி முதல்வர் வெங்கடாசலம், கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், சுய உதவிப்பிரிவு துணை முதல்வர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ராஜேஷ்குமார் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி., என்.எஸ்.எஸ். அதிகாரிகள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செயல்படுகிற இயற்கை மற்றும் யோகா சிகிச்சை மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதற்கு நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் தலைமை தாங்கினார். இவ்விழாவில் டாக்டர் கல்யாணி, ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான யோகா பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்தார். இதனை நர்சிங் கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.
இதையொட்டி இயற்கை உணவுகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதனை அனைவரும் பார்வையிட்டனர். இதில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜவேலு, மருத்துவமனை கண்காணிப்பாளர் உமாதேவி, நிலைய மருத்துவ அதிகாரி சந்தானகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story