இந்திய கடற்படை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
இந்திய கடற்படை சார்பில் 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடற்படை சார்பில் 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் சி.ஐ.எஸ்.எப். என்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் இணைந்து கொண்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிக்கான இந்திய கடற்படை ‘ரியர் அட்மிரல்’ அலோக் பட்நாகர், சி.ஐ.எஸ்.எப். படையின் தென்பிராந்திய ஐ.ஜி. ஆனந்த் மோகன் மற்றும் சி.ஐ.எஸ்.எப்.-ன் மூத்த கமான்டன்ட் ஸ்ரீராம், பாலே உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கடற்கரையில் இந்திய கடற்படை வீரர்களும், சி.ஐ.எஸ்.எப். படை வீரர்களும் யோகா பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டனர். இரு பாலினத்தைச் சேர்ந்த வீரர்களும் இந்த பயிற்சியை மேற்கொண்டது சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது.
Related Tags :
Next Story