கட்சிரோலிக்கு பணி இடமாற்றம் கேட்கும் 68 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிச்சுமை காரணம்
அதிக பணிச்சுமை காரணமாக கட்சிரோலிக்கு பணி இடமாற்றம் கேட்டு மும்பையை சேர்ந்த 68 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
மும்பை,
அதிக பணிச்சுமை காரணமாக கட்சிரோலிக்கு பணி இடமாற்றம் கேட்டு மும்பையை சேர்ந்த 68 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
பணி இடமாற்றம்
மும்பையில் உள்ள 94 போலீஸ் நிலையங்களில் 2 ஆயிரத்து 850 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 1,200 சப்-இன்ஸ்பெக்டர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர்.
இந்தநிலையில் மும்பையில் பணியாற்றும் 68 சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்களுக்கு கட்சிரோலிக்கு பணி இடமாற்றம் வழங்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
அதிக பணிச்சுமை
மும்பையில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்திற்குள்ளும், வெளியிலும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தான் அதிக பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. எனவே தான் பலர் பணி இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள கட்சிரோலிக்கு பணி இடமாற்றம் கேட்டால் போலீசாருக்கு எளிதில் பணி இடமாற்றம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிராகரிக்கப்பட வாய்ப்பு
இதை கருத்தில் கொண்டே மும்பையில் இருந்து தப்பிக்க 68 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்சிரோலிக்கு பணி இடமாற்றம் கேட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது மும்பை போலீசில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் 68 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது’, என்றார்.
Related Tags :
Next Story