வாகனம் மோதி தொழிலாளி பலி


வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Jun 2018 4:25 AM IST (Updated: 22 Jun 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

வேட்டவலம், 

வேட்டவலம் அருகே ஜமீன்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிலோ கார்பஷ்குமார் (வயது 25), சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான ஜமீன்கூடலூருக்கு வந்தார். சம்பவத்தன்று தளவாய்குளம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஜமீன்கூடலூருக்கு செல்ல நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ராஜந்தாங்கல் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பிலோகார்பஷ்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story