சண்முகா அரசு பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம் கலெக்டர் பங்கேற்பு


சண்முகா அரசு பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம் கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Jun 2018 4:33 AM IST (Updated: 22 Jun 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை சண்முகா அரசு பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை,

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் சாமுவேல் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டார். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சவுமியா, சுரேஷ்குமார், ஆனந்தன் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். இதில் சூரியநமஸ்காரம், பத்மாசனம், பஸ்சிமோத்தாசனம், யோக முத்ரா போன்றவை செய்து காண்பிக்கப்பட்டு பயிற்சி செய்யப்பட்டது. அப்போது யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வி குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வேளாண்மை கல்லூரி

அதேபோல் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான யோகாவை செய்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் சிவகுமார், கிருஷ்ணவேணி மற்றும் யோகா பயிற்றுனர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அல்லியந்தல் அரசு பள்ளி

பெரணமல்லூர் அருகே உள்ள அல்லியந்தல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் யோகா செய்தனர். பத்மாசனம், யோக முத்ரா, சூரிய நமஸ்காரம் போன்றவை செய்தனர்.

இதில் தலைமை ஆசிரியர் மாலவன் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

Next Story