குடியாத்தத்தில் திருவிழா தொடர்பாக அமைதி கூட்டம்
திருவிழாவை அமைதியாக நடத்துவது தொடர்பான அமைதி கூட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
குடியாத்தம்,
குடியாத்தம் தாலுகா ஐதர்புரம் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பொன்னியம்மன் திருவிழாவும், 24-ந் தேதி கெங்கையம்மன் திருவிழாவும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை அமைதியாக நடத்துவது தொடர்பான அமைதி கூட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, தாசில்தார் பி.எஸ்.கோபி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், வருவாய்ஆய்வாளர் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி உள்பட கிராமத்தை சேர்ந்த இருதரப்பு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து திருவிழாவை நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருவது என உறுதி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story