வாகன சோதனையின் போது 1,800 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல்
பல்லடம் அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது வேனில் கொண்டு வரப்பட்ட 1,800 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேனில் வந்த 4 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்,
திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முறைகேடாக இயங்கி வந்த கலப்பட எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அத்துடன் அந்த நிறுவனத்தில் இருந்த 2 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோல் அவினாசியிலும் இயங்கி வந்த கலப்பட எண்ணெய் நிறுவனத்திலும் சோதனை நடத்திய அதிகாரிகள் 4,500 லிட்டர் கலப்பட எண்ணெயை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயராஜா, ரவி ஆகியோர் உணவு பொருள் கலப்படம் எதும் நடைபெறுகிறதா? என்று பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த அதிகாரிகள் 3 பேரும் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் இருந்து சோமனூர் செல்லும் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த வேனில் ஓம்கணபதி கடலை எண்ணெய் என்ற பெயர் அச்சிடப்பட்ட எண்ணெய் பாக்கெட்டுகள் இருந்தன. இதை எடுத்து உடைத்து சோதனை செய்தனர். அதில் பாமாயில் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ½ லிட்டர் மற்றும் 1 லிட்டர் பாக்கெட்டுகளாக இருந்த 1,800 லிட்டர் கலப்பட எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
அத்துடன் பாமாயில் என்று இருந்த எண்ணெய் பாக்கெட்டுகளை எடுத்து பார்த்தனர். அதில் எண்ணெய் தயாரிக்கப்பட்ட தேதி, முழு முகவரி, உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்டவை இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தயாரிப்பு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண் அச்சிடப்படாமல் இருந்த ருக்கிகோல்டு, பாமாயில் என 2,400 லிட்டர் எண்ணெய் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
இதைத்தொடர்ந்து வேனில் வந்த 4 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த குமரேசன் (வயது 35), மகேஷ் (19), மற்றும் லோடு மேன்களான குருசாமி (35), வீராசாமி (28) என்பது தெரியவந்தது. அத்துடன் கோவை மாவட்டம் அன்னூர் ஏ.எம்.காலனியில் கதவு எண் 3/4டி ராஜீவ் வீதி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த எண்ணெயை ஏற்றி வந்து திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் பாக் கெட்டுகள் மற்றும் வேனை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
இது குறித்து அதிகாரி தமிழ்செல்வன் கூறுகையில், உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாகவும், பொதுமக்களை ஏமாற்றும் வகையிலும் உணவு பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகும். தற்போது கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கலப்பட எண்ணெய் பல்லடம், திருப்பூர் பகுதிகளில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அறிக்கை வந்த பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலி எண்ணெய் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடைகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது தெரியவந்தால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

Related Tags :
Next Story