காதல் மனைவி தற்கொலை முயற்சி: விஷம் குடித்து வாலிபர் சாவு தூத்துக்குடி அருகே பரிதாபம்
தூத்துக்குடி அருகே காதல் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் விஷம் குடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே காதல் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் விஷம் குடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
குடும்ப தகராறு
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த விக்ரமன் மகன் ஹரிகுமார் (வயது 27). அவருடைய மனனவி கவிதா (24). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஹரிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தற்போது கவிதா, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் மாப்பிள்ளையூரணி காட்டு பகுதியில் ஹரிகுமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள், தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தற்கொலை
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஹரிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறுகையில், கவிதாவின் தற்கொலை முயற்சிக்கு காரணம், தான் என நினைத்து ஹரிகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஹரிகுமார், கடந்த ஆண்டு சென்னை பள்ளிகரணையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story