பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது


பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 23 Jun 2018 4:30 AM IST (Updated: 23 Jun 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு கல்லூரியில் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (எஸ்.சி, எஸ்.டி.) மாணவ- மாணவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. மற்ற பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ.60-ஐ செலுத்தி விண்ணப்பத்தினை வாங்கி சென்றனர். மாணவர் சேர்க்கை குழுவை சேர்ந்த பேராசிரியர்- பேராசிரியைகள் விண்ணப்பத்தினை வழங்கினார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் பட்டமேற்படிப்பு அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஜூலை 11-ந் தேதியும், அதனை தொடர்ந்து 12-ந் தேதி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு ஆகிய கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறுகிறது. பட்டமேற்படிப்புக்கான படிப்புகளில் மொத்தம் 337 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.

Next Story