நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உலக யோகா தின விழா
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உலக யோகா தின விழா நடந்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உலக யோகா தின விழா நடந்தது.
திசையன்விளை
திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் டி.சுயம்புராஜன் தலைமை தாங்கி, யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பள்ளி முதல்வர் வே.தமிழரசி வரவேற்று பேசினார். மாணவ-மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். யோகா பயிற்சியாளர் ரஜீத் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை பொன் முத்தம்மா நன்றி கூறினார்.
பணகுடி
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர். இதில் பள்ளி நிர்வாகி, தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்
வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரைமண்ட் தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராதா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கங்கைகொண்டான்
கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அலெக்ஸ் சகாயராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் குமார் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு யோகாசன பயிற்சிகளை வழங்கினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமலைகுமார் செய்து இருந்தார்.
குருவிகுளம்
குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கதிரேசன் கோவில் மலையில் யோகாசனம் செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுப்பாராஜூ மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகாதினவிழா பள்ளி தாளாளர் திலகவதி தலைமையில் கொண்டாடப்பட்டது. நிர்வாக இயக்குனர் ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் வரவேற்றார். சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் ஹரிஹரசுப்பிரணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாணவ, மாணவிகள் 200 பேர் யோகா செய்தனர். விழாவில் செஞ்சிலுவை சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் திலகவதி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சண்முகநல்லூர்
சண்முகநல்லூர் சொர்ணவித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் ரேணுகா தேவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் யோகா செய்தனர்.
வடக்குபுதூர்
வடக்குபுதூர் வேல்ஸ் பப்ளிக் பள்ளியில் உலக யோகா தினம் பள்ளி தாளாளர் பேராசிரியர் முருகராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி பொதுமேலாளர் பார்த்திபன், முதல்வர் தேன்மொழி உள்பட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் சூர்யநமஸ்காரம், பத்மாசனம், உச்சிஸ்டானம் உள்பட பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
செங்கோட்டை
செங்கோட்டை விசுவநாதபுரம் ட்ரஷர் ஐலேண்ட் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பர்வீன் தலைமை தாங்கினார். ஆசிரியை மாதவி, மாணவர்களுக்கு யோகாசனங்களை கற்று கொடுத்ததுடன், யோகாசனத்தின் பலன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அபிஷா, மக்புல், கவியா, வேணி, இசக்கிமுத்து, ரேஜி, ப்ரீத்தா, ஆஷா மற்றும் தேவி பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
இலஞ்சி
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி முதல்வர் வனிதா முன்னிலை வகித்தார். மாணவி ருகையா வரவேற்றார். செபி குழுவினர் நடனமாடினர். கவுரி குழுவினர் யோகா பற்றி பேசினர். பொன்செல்வ ஜெயந்த் குழுவினர் யோகா செய்து காட்டினர். மாணவி ஆபியா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலர் காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story