கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாகோவை டாடாத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கோவை,
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தை கொலை வழக்காக மாற்றக்கோரியும், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்படி பாகோவை டாடாத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் இலக்கியன் தலைமை தாங்கினார். மைய மாவட்ட செயலாளர் நிலா மணிமாறன் மற்றும் சித்தார்த்தன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கண்ணகி, கரிகாலன், அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
Related Tags :
Next Story