ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
புலவர்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலியமங்கலம்,
தஞ்சை மாவட்டம் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் புலவர்நத்தம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்துக்குள் இருந்த 50 ஆண்டுகள் பழமையான ஓட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது. அதன்பின் மற்றொரு கட்டிடத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை ஒரே அறையில் மாணவ- மாணவிகளை அமரசெய்து பாடம் நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கான இருக்கை பற்றாக்குறையால் பள்ளி மாணவர்களை பள்ளி வளாக வெளிப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கட்டிடத்தில் அமர செய்து பாடம் நடத்தப்படுகிறது.
இந்த பள்ளியில் உள்ள குறைபாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர். மேலும் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் மறுக்கின்றனர். இப்பகுதி மாணவர்கள் வேறு அரசு பள்ளிக்கு செல்லவும் வாய்ப்பில்லை. எனவே புலவர்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story