நாகை பகுதியில் குறுவை சாகுபடி நடைபெறுவது கேள்விக்குறி விவசாயிகள் தவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடாததால் நாகை பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
கீழ்வேளூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடியை மேற்கொண்டு வந்தனர். இந்த சாகுபடி பணிகளை மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், பருவமழை ஆகியவற்றை நம்பியே மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது பருவகால மாற்றங்களால் பருவமழை காலங்களில் சரிவர மழை பெய்வது கிடையாது.
அதேபோல் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது கிடையாது. இதனால் நாகை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி என்பது கானல்நீராகவே உள்ளது.
குறுவை சாகுபடி பொய்த்துபோன நிலையில் நாகை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக சம்பா அல்லது தாளடி சாகுபடி என ஒருபோக சாகுபடியை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். அதுவும் சில நேரங்களில் மழை வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகிறது.
விவசாயம் நலிவடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு கட்டிட வேலை உள்ளிட்ட மாற்று பணிகளில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயம் சரிவர செய்யமுடியாததால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களை தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயம் இல்லாத காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது 100 நாள் வேலையும் வழங்கப்படாததால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இந்த நிலையில் நீண்ட கால இழுபறிக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டால் எப்படியும் தமிழகத்திற்கு சேரவேண்டிய தண்ணீர் கிடைத்துவிடும். மேலும், கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற நம்பிக்கையில் நாகை பகுதிகளில் விவசாயிகள் தங்களது வயல்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கர்நாடக மாநிலத்திலும் நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாகை பகுதியில் குறுவை சாகுபடி நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது.
கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற நம்பிக்கையில் குறுவை சாகுபடிக்காக உழவு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தண்ணீர் இதுவரை திறந்துவிடப்படாததால் குறுவை சாகுபடி பணிகளை உழவு பணியுடனேயே நிறுத்தி வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் சாகுபடி பணிகளை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்படுவதால் பண விரயம் ஏற்படுவதுடன் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

Related Tags :
Next Story