விருந்தில் பரிமாறப்பட்ட உணவு விஷமான சம்பவத்தில் மேலும் 2 பேர் பலியான பரிதாபம் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்வு

விருந்தில் பரிமாறப்பட்ட உணவு விஷமான சம்பவத்தில் மேலும் 2 பேர் பலியான பரிதாபம் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 Jun 2018 3:45 AM IST (Updated: 23 Jun 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

விருந்தில் பரிமாறப்பட்ட உணவு விஷமான சம்பவத்தில் மேலும் 2 பேர் பலி ஆனார்கள். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பை, 

விருந்தில் பரிமாறப்பட்ட உணவு விஷமான சம்பவத்தில் மேலும் 2 பேர் பலி ஆனார்கள். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.

விஷமான உணவு

ராய்காட் மாவட்டம் காலாப்பூர் மகாட் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரின் புதுமனை புகுவிழா கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சுமார் 500 பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது.

இதில் விருந்தில் பரிமாறப்பட்ட உணவு விஷத்தன்மை அடைந்து அதை சாப்பிட்ட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 2 பேர் பலி

இதில் பிரகதி (வயது12), கல்யாணி (7) என்ற சிறுமியும், ரித்திகேஷ் என்ற சிறுவனும் உயிரிழந்தனர். இந்தநிலையில் விஷத்தன்மை அடைந்த உணவை சாப்பிட்ட சிறுவன் விஜய்யும் (11), தொழிலாளி கோபிநாத்தும் நேற்று முன் தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இதில் சிறுவன் விஜய் ஏற்கனவே பலியான சிறுமி பிரகதியின் தம்பி ஆவான்.

இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Next Story