காரைக்குடியில் என்.சி.சி.மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


காரைக்குடியில் என்.சி.சி.மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
தினத்தந்தி 23 Jun 2018 3:24 PM IST (Updated: 23 Jun 2018 3:24 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

காரைக்குடி

காரைக்குடியில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.
 இந்த முகாம் கடந்த 17-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, சிவகங்கை, ராமேசுவரம், திண்டுக்கல், திருச்சி, அறந்தாங்கி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், கூடாரம் அமைக்கும் பயிற்சி, யோகா பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர கபடி, கோகோ, கைப்பந்து போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.


மேலும் இதில் சிறப்பாக பயிற்சி பெற்ற என்.சி.சி. மாணவ-மாணவிகள் டெல்லியில் நடைபெறும் தகுதி பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளனர். 10 நாட்கள் நடைபெறும் முகாமிற்கு என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி கர்னல் அஜய்ஜோசி, துணை கமாண்டிங் அதிகாரி கர்னல் கே.ஆர்.ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கினர். என்.சி.சி. அதிகாரி கவிப்பிரியா மற்றும் என்.சி.சி. அலுவலர்கள் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். 

Next Story