சிவகங்கையில் 36 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டு 12 வட்டாரங்களில் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
சிவகங்கை,
பொது சுகாதாரத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 36 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் இன்று தொடங்குகிறது என்று சுகாதார துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டு 12 வட்டாரங்களில் தலா 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த முகாம்களில் இதயநோய், சர்க்கரை நோய், எலும்பு நோய், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கண், பல் நோய் ஆகியவற்றை சிறப்பு மனநல மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் கண்புரை நோய் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு இலவசமாக அழைத்துச் சென்று கண் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த முகாமில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி. ஸ்கேன் பரிசோதனை, சளி பரிசோதனை ஆகியவை செய்யப்பட உள்ளன.
இந்த முகாம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சக்கந்தி அரசு மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், நாகாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிறது. வருகிற 30-ந் தேதி அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஊத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், புலியடித்தம்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி அன்று கல்லல் ஊராட்சி ஒன்றியம் போர்டு பள்ளி, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், அனுமந்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 14-ந் தேதி அன்று சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெத்தாட்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்அடையலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story